சாலையோர மரங்கள் எல்லாம் சாகடிக்கப்பட்டதனால்
கானல்நீரில் மிதக்கின்ற நான்கு வழி சாலைகளே!
பாலை நிலம் உன்னாலே பாதை நெடுக உருவாக
பாழாகிப்போன பூமிதானே உன் பரிசு
வாலை ஆட்டிப் பறக்கின்ற பறவைகளும்
பயம் கொண்டு பாழும் வழி
இதன் மீது பறப்பதில்லை என்பதுவும்
பாவி நீ எங்களுக்கு தருகின்ற பரிசுதானே
நூலளவு இடைவெளியில் நூறுக்கும் மேல்
வேகத்தில் ஓடி ஒடி செல்வதனால்
மனதிலும் மனித உடலிலும் ஓட்டத்தை
அதிகரிக்க செய்வதுவும்
நீ தருகின்ற பரிசுதானே
முடிவில்லா மோன நிலையிலே
உயர் அமைதியை இம் மண்
இழந்ததுவும் உன் பரிசு தானே
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942