நான் தான் கெஞ்சுகிறேன்…

நட்சத்திரப் புள்ளிகளைக்
கற்பனைக் கோடுகளால்
இணைத்து உருவை அனுமானிப்பது

உள்ளுக்குள் புழுங்கி அழுபவனின்
கண்ணீருக்கு சிறுதூசி பழியை ஏற்பது

மெல்ல‌ப் புரிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி

இப்போதும் கூட பாரேன்
நான் தான் கெஞ்சுகிறேன்!

ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com