திண்ணை ஓரம் படுத்திருக்கும்
திருடன் வந்தால் குரைத்திருக்கும்
கண்ணை மூடிக் காதைத் தூக்கிக்
காவல் காத்துக் கொண்டிருக்கும்
வாலை ஆட்டி மகிழ்ச்சி காட்டும்
வழிக்கு நல்ல துணையாகும்
காலை நீட்டிப் படுத்தெழுந்து
களிப்பில் துள்ளிப் பாய்ச்சல் காட்டும்
நாயை மறக்கக் கூடாதே
நாயை என்றும் அடிக்காதே
நாயும் நன்றி மறக்காதே
நன்றி நீயும் மறக்காதே
– கவிஞர் வாணிதாசன்