நாராயணா

நாராயணா

நாராயணா

ஏழைகள் படுக்க தரை கூட இல்லையென்ற வருத்தத்தில்

பாம்பு மெத்தையில் படுத்துள்ளாயோ நாராயணா

மனிதன் மனம் வேதனையால் தவிப்பதைச் சகிக்காமல் நீயும்

ஆதிசேஷனின் மூச்சு வேதனையைத் தாங்கிக் கொண்டுள்ளாயோ?

மனிதன் தூங்கும் பொழுது தான் பசி என்னும்

மகன் பிறந்து வயிற்றை கிள்ளுகிறான் அதே போல்

நீ தூங்கும் பொழுது உன் வயிற்றில் பிரம்மா பிறந்து

உன்னைக் கிள்ளுகின்றானோ? நாராயணா

போதும் மற்றவர்களுக்காக நீ படும் வேதனை விளையாட்டு

லட்சுமி உன் காலை அழுத்தி அழுத்தி களைத்து விட்டாள்

அவளையாவது சந்தோசப்படுத்து நாராயணா

சுருதி

 

பூமித்தாய்

குழந்தை வளரும் பொழுது “அழகே” என்றவள் (தாய்)

வளர்ந்து வீட்டில் இருக்கும் பொழுது “நெருப்பு” என்பாள்

வளரும் பொழுது என் “வாரிசு” என்றவர்

வளர்ந்த பின் “தண்டம்” என்பார் தந்தை

திருமணத்திற்கு முன் “கண்மணியே” என்றவன்

திருமணத்திற்கு பின் “கண்வலியே” என்பான்

தாயே “கோவில்” என்பான் மனைவி வரும் வரையில் -பின்

“கிழவி” “கிழம்” என்பான் பிள்ளை

ஆனால் “பூமா” நீ மட்டுமே நான் பிறக்கும் முன்

நான் உதிக்கக் காரணமாக இருந்த என்

தாய் தந்தையையும் சுமந்து பின்

பிறந்து வளரும் பொழுது நான் செய்த பாவங்களையும் பொறுத்து

நீ மட்டுமே ஒரு பொழுதும் வெறுக்காமல்

நான் இறந்த பின்னும் சுமக்கும் நீ ஒரு

இனிய “சுமை தாங்கி”! நீ மட்டுமே உண்மையான நிலையான தாய்

இதை ஏன் யாரும் நினைப்பதில்லை!!

–  சுருதி

 

ஏழை அண்ணன்

அவன் உடம்பில் ஒரு துணியில்லை

துணியைத்தான் சுமக்க முடியவில்லை

உன்னையாவது தோளில் சுமக்கிறேன்

என சுமக்கிறான் துணியை அல்ல அவன் தம்பியை!

–  சுருதி

 

பெண்ணின் கால்

பாதி மூடிய மேகத்தில் மீதித் தெரியும் நிலவு போல்

உன் அழகான பாதங்கள்

–  சுருதி

 

Visited 1 times, 1 visit(s) today