உழைப்பினை நம்பிடு
உன்னதமாக உயர்ந்திடு
உனக்குள் எழும்
உயரங்களைத் தொட்டிடு!
முன்னேற்றப் பாதைக்கு
முயற்சிகளோடே நடந்திடு
தடைகளைப் படிகளாக்கிடு
தனிவழி அமைத்திடு!
மனச்சோர்வை ஒழித்திடு
மாற்றங்களை வரவேற்றே
மனங்களில் வெற்றி
மரபைப் பதித்திடு!
தோல்விகளைத் தோற்கடித்தே
தோற்றங்களைச் செம்மையாக்கிடு
தோசங்களை விரட்டியே
நாளைகளை நமதாக்கிடு!
கவிமணி இரஜகை நிலவன்
மும்பை