நிகழ் கால நினைவு நீ
எதிர்கால கனவு நீ
பிரியாதே உயிரே நீ
நீங்காத நினைவு நீ…
எனதுயிர் தோழி நீ
எனதருமை மனைவி நீ
பொய் இல்லா கவிதை நீ
காரில்லா மனது நீ…
முற்பிறவி சொந்தம் நீ
முடியாத பந்தம் நீ
மண்ணுலக நிலவு நீ
மறையாத ஔியும் நீ…
அன்பு குறையாத கடலும் நீ
ஓயாத அலையும் நீ
அழகு குறையாத நிலவு நீ
அன்பு குறையாத அன்னை நீ…
-செந்தமிழ் சத்யா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!