தாய் இருக்கும் வரை பாசம் நிச்சயம்
தந்தை இருக்கும் வரை பாதுகாப்பு நிச்சயம்
கண்கள் இருக்கும் வரை பார்வை நிச்சயம்
உறவுகள் இருக்கும் வரை பந்தங்கள் நிச்சயம்
நல்ல நண்பர்கள் இருக்கும் வரை வெற்றி நிச்சயம்
மரங்கள் வளர்க்கும் வரை வாழ்வு நிச்சயம்
தமிழைப் போற்றும் வரை தமிழனின் பெருமை நிச்சயம்
ஆசிரியர்கள் இருக்கும் வரை உயர்வு நிச்சயம்
கல்வி இருக்கும் வரை சிந்தனைத் திறன் நிச்சயம்
இரா.அஜந்தா
தமிழ் ஆசிரியை
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்