என் வனாந்திரத்தின்
மவுனப் பேரிரைச்சலில்
கண்களை மூடிக்கொண்டு நான்
நட்சத்திரங்களை எண்ணும் தருணத்தில்
என்னிதயத்தின் நரம்பு ரேகைகளில்
உன் நினைவுப் பெருவெள்ளம்
வரம்புகளை மீறி
இமைகளின் விரிசலில்
சொட்டுச் சொட்டாய்
கன்னத்தின் வழியே
வழிகின்ற வலியில்
பெரும் குரலெடுத்து
கம்மிப் போகிறது
உன் காலடியிலிருந்து எழும்
கொலுசின் சப்தங்களைப் போல…
கவிஞர் விசித்திரக்கவி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!