நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
மறைந்திருக்கும் உண்மைகளை
ஆய்வாளர்கள் அறிவார்கள்
இத்தனை உண்மைகளைச் சிதறியபடி
அவனுக்கான வடிவத்தை
அடைந்ததை போல்
எல்லோருக்காகவும் பேசுகிறான்
அவனை மீட்டெடுக்கும்
விரிந்த ஆகாயத்திற்கு
நன்றி சொன்னான்
அவனை ஏமாற்றும்
இந்த உலகம் இயற்கையாகவே
மிகப் பெரியது
அருவியின் நிலைத்த ஓசைக்கு
மத்தியில் அவன் உறங்குகிறான்
புஷ்பால ஜெயக்குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!