நீயும் நானும் பேசிக் கொண்டிருக்கையில்
தெரிந்து விடுகிறது
உன் நோக்கங்களுக்குண்டான தடங்கள்
என்னை மூழ்கடிக்க நினைக்கும்
அச்சிறு தூறல்களுக்குத் தெரியவில்லை
நான் நீச்சல் அறிந்திருக்கிறேன் என்று
ஆற்றின் அளவீடுகளை மட்டும் அறிந்திருந்த
உன் பரிசல்கள் ஆழியைக் கடந்துவிடும் என்பது
உன் அறியாமையே
புலியென பறைகொட்டி யானையை
எதிர்கொள்ள எண்ணுவது
பூனையின் பேராசை
உன்பலம் அறியாமல்
என்னை எடை போட நினைக்கிறது
உன் நியாயமற்ற தராசு

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250