நியாயம் – கவிதை

நியாய மற்றவைகளை
நியாயப்படுத்தி
நியாயம் கற்பித்தலில்
நியாமற்றதாய் போய்விடுகிறது
நியாயம் அநியாயமாய்

அகக் கண்களில்
அகப்பட்டுக் கொண்டு
அமுது புரளும் அநியாயம்
புறத்தினுள் புடம் போட்ட நியாயமாய்
நிமிர்ந்து நடக்கிறது
அநியாய ஆடையை
அநாயசமாய் கழட்டி எறிந்தபடி

நியாயங்கள்
அநியாயங்களென்றும்
நியாயமற்ற அநியாயங்கள்
நியாயமானதாகவும்
அறிமுகப்படுத்துதலில் நின்று
அதிர்ந்து போகிறது நியாயம்.

நியாயத்தை
நியாயமாகவே ஏற்பதே நியாயம்…

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
9894918250

3 Replies to “நியாயம் – கவிதை”

  1. நியாயம் கவிதையில் தெள்ளத்தெளிவாக நியாயத்தைப் பற்றி சொல்லி இருக்கும் கவிஞர் கவியரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.