இதழ்கள் திறந்து
காட்டப்படாத
அரைவட்டம்.
மகிழ்வின்
உப்புதலில்
கன்னங்களும்
கண்களும்
வெளிவர முயற்சிக்கும்
அரைவட்டத்தை
தொகுதி பிரித்தன.
ரசிக்கும் ஒவ்வொருவரும்
வேட்பாளர்
ஆகிவிடுகிறோம்.
அன்பின் ஓட்டினைப்பெற
போட்டியிட்டு நிற்கிறோம்.
வாக்குறுதிகள்
பொய்யாகும் சூழலில்
குழந்தைகளின் அடம்பிடித்தல்
நியாயம் கேட்கும்.
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!