நாம் சேமித்த பணத்தைச் சும்மா வைத்திருக்காமல் அது வட்டியைப் பெறும் வகையில் வங்கியில் செலுத்தி வைப்பது தான் வைப்பு நிதி (டெபாசிட்) ஆகும். அதில் இரண்டு வகைகள் உள்ளன.
1. நிரந்தர வைப்பு நிதி
2. தொடர் வைப்பு நிதி
நிரந்தர வைப்பு நிதி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் பணத்தைப் போட்டு வைப்பது.
நாம் இரண்டு வாரம் முதல் பத்து வருடங்கள் வரை வங்கியில் பணத்தை முதலீடு செய்து வைக்கலாம். முதலீடு செய்யும் முன் வட்டி எத்தனை சதவீதம் கிடைக்கும் எனக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். செலுத்திய தொகைக்கு வங்கியில் கொடுக்கப்படும் இரசீதை வாங்கிப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் வங்கி நமக்கு அசல் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்துத் தரும்.
நாம் வங்கியில் வைத்திருக்கும் இந்தப் பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எடுக்க முடியாது. தேவை என்றால் அதைப் பிணையாக வைத்துக் கடன் வாங்கலாம். அந்தக் கடனுக்கு நமக்குக் கொடுக்கும் வட்டியை விட அதிகம் ஒரு சதவீதம் வங்கி பிடித்துக் கொள்ளும்.
தேவை என்றால் நாம் அந்தக் கணக்கைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன் முடித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தால் எவ்வளவு காலம் நம் பணம் வங்கியில் இருந்ததோ அதற்கு மட்டும் வட்டி கொடுப்பார்கள். ஒரு சிறிய தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.
வைப்பு நிதி என்பது மிகவும் எளிதான தேவைப்பட்டால் உடனே எடுக்கக் கூடிய ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம் ஆகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!