மதிமுகம்
என்பார்கள்
ஏன்?
மதி கொண்டு
வெளியில் கடுமையாய்
நடந்து கொள்!
அப்பொழுதுதான்
உன்னைப் பாதுகாக்க
முடியும்
என்பதால்!
நிலா போல்
ஒளி வீசுபவள்
என்பார்கள்!
அழகில்
பிரகாசிப்பதால்
அல்ல;
நிலாவைப் போல்
சுய ஒளி
இல்லை என்பதால்!
மன்னிக்கவும்
இருக்கக்கூடாது
என்பதற்காக!
இதே போல்
இன்னொரு ஒற்றுமை
நிலவை அறிதல்!
சாதனை
பெண்ணின் மனதை
அறிவதும் சாதனை!
ஆம்…
பெண்ணின் மனதிலும்
கணவன், குழந்தைகள்
தாய் தந்தை
சகோதரன் சகோதரி
மாமியார் மாமனார்
பணிச்சுமை
இன்னும் எத்தனையோ
மேடு பள்ளங்கள்…
நிலவு போல்
மற்றும் ஒரு அதிசயம்
பெண்ணுக்குள்!
ஆம்…
மனம் மகிழ்ந்தால்
அவள் பௌர்ணமி!
மனம் துக்கினால்
அவள் அமாவாசை!
புவியை நிலவு
10முறை சுற்றிவர
273 நாட்களாம்!
குழந்தை பெண்ணின்
கருவறையில் சுற்றி
வெளிவரும் காலமும்
273 நாட்களாம்
தோராயமாக!
பெண்ணே
நிலா போன்றவளே
என்றால்
மயங்கி விடாதே!
இதில் எத்தனை
அர்த்தங்கள்!
யோசித்துக் கொள்!
விழித்துக் கொள்!
காத்துக் கொள்!
– ஆர்.இந்துஜா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!