இயற்கை தந்த இதமான இரவில்
எழில்மிகு நிலவே
முன்பனியில் முகம் நனைந்த உன்னை
மூடித் துடைக்க உரசிய முகில்கள்
போதை மயக்கத்தில்
ஒன்றோடொன்று மோதித்தான்
இடியும் மின்னலும் உருவாகிறதோ!
இல்லை உரசிய வெப்பத்தில்
உருகிதான் மழையாகிறதோ!
தா.நவீன்ராஜ்
ஆசிரியர், கலைமகள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி
ஆக்கூர், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்