தூய பாலில் தூசு பட
திரியக் கூடும்
தயிரென்றால்
புளிப்பேறி
போகக் கூடும்
வெண்ணையதோ
விரைவாக உருகக் கூடும்
நெய்யான பின்னர்தான்…..
விருந்துக்கும் மருந்துக்கும்
விளக்கேற்றி வணங்குதற்கும்
உகந்ததாகும்…
உடையால் நடையால்
அல்ல உயர்வு…
உணர்வால் உள்ளத்தால்
நிலைக்கும் வாழ்வு….
கைபேசி: 9865802942