நிலைமாற வேண்டாமே
சரியாக நடந்து கொள்வதால்
பிறருக்கு பிடிக்காமல்
போனாலும் பரவாயில்லை
இறுதிவரை
சரியாகவே நடந்து கொள்ளுங்கள்!
நல்லவர் கோபம்
தீயவர் கோபம்
நல்லவர்களைத் தீண்டாது
ஆனால்
நல்லவர் கோபம் தீயவர்களை
நாசம் செய்து நரகம் காட்டும்…
உண்மையும் இதுவே!
கூட கும்புடு
கூடகூட கும்புடு போடுகிறவன்
கூடமாட வருவதில்லை
இறுதிவரை!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்