வெற்றி தோல்வி யாவும்
நமது கையிலே!
முயற்சி செய்து பார்த்தால்
கிடைக்கும் நன்மையே!
அனைத்தும் எளிதாய் அமைந்து விட்டால்
உழைக்கத் தோணுமா?
அலைந்து திரிந்து உழைக்கத்
தெரிந்தால் அருமை புரியுமே!
அதிர்ஷ்டம் வரும் என்று அமர்ந்து விட்டால்
நிலைமை மாறுமா?
திறமை கொண்டு உழைத்து
பார்த்தால் நிலைமை மாறுமே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com