நீந்திட வாங்க

கோயில் தெப்பம் நிறைஞ்சிருக்கு

கூடி நீந்த ஓடி வாங்க!

தாவிக் கூத்தாடி அங்கே

தங்கமீனைப் பிடிக்க வாங்க!

 

தூவிபூவால் நீரை மறைத்துத்

தொங்கும் மரத்தில் ஏற வாங்க!

ஏவிவிட்ட அம்பைப் போல

எழுந்து நீரில் குதிக்கவாங்க!

 

கூவிக் கூவிக் பாடியழைக்கும்

குயிலின் கீதம் கேட்க வாங்க!

ஓவியமாய் இக்காட்சி தன்னை

உருவாக்கி நீங்க மகிழ வாங்க!

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)