”வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்” எனும் தலைப்புடன் இயங்கும் நீரோடை.காம் தளம் அவ்வார்த்தைகளுக்குத் தக, சிறப்புடன் காணப்படுகிறது.
பல சிற்றாறுகள் இணைந்து பெரிய நீரோடையாகக் கட்டுக்கடங்காமல் ஓடுவதைப்போல, பல இலக்கிய வடிவங்களுடன் இணைந்து புதிய வடிவ அமைப்புடன் சிறக்கிறது இத்தளம்.
இத்தளத்தில் பல தலைப்புக்கள் உள்ளன.
அவையாவன,
கதை
கவிதை
நூல் மதிப்பீடு
கட்டுரை
ஆன்மிகம்
ஜோதிடம்
சிந்தனைத்துளி
நலம் வாழ
திருக்குறள்
மற்றவை என்பதாகும்.
கவிதைத்தொகுப்புகள், ஜோதிடம், திருக்குறள் உரையுடன், ஆண், பெண் குழந்தைகளுக்கானப் பலஆயிரம் தமிழ்ப்பெயர்கள், சுற்றுச்சூழல், திருமணப் பொருத்தம், கோலங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவை எனப் படைப்புகள் நிறைந்து கிடக்கின்றன.
கதைகள் MARCH 13, 2015 லிருந்து வெளியிடப்படுகின்றன. கவிதையில் தொகுப்புகளாகவும், தனித்தலைப்புகளிலும் காணப்படுகின்றன.
ஆன்மீகம் பகுதியில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.
திருக்குறள் பகுதியில் மு வரதராஜன், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோரின் உரைகள் அனைத்துக் குறள்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு குறளுக்குப் பொருள் கூறுவதை இனி காணலாம்.
” செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செய்கலா தார்.”
குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் – செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
கலைஞர் மு. கருணாநிதி
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
தளத்தைக் குறித்து அவர்களின் மொழியில் காணும்பொழுது,
நீரோடை குழு மற்றும் இத்தளமானது திரு.மகேஸ்வரன் அவர்களின் முயற்சியாகும். எங்கள் www.neerodai.com இல் கூடுதல் கட்டுரைகளை வைத்திருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
தமிழ் கவிதைகள்
தமனிமட்டம்
சுற்றுச்சூழல்
புகைப்படம் எடுத்தல்
படங்கள் பதிவிறக்கம்
சுய உந்துதல் மேற்கோள்கள்
ஆன்மீக மேற்கோள்கள்
குழந்தை பராமரிப்பு
வரி வரைபடங்கள்
ஓவியங்கள்
ரங்கோலி
ஸ்னாப்ஷாட்கள்
சுகாதாரப் பாதுகாப்பு
சமையல் குறிப்புகள்
சமூக சேவை
இன்னும் பல பிரிவுகளில் படைப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன.
இலக்கு
எங்கள் தளத்தில் இடுகைகளை வெளியிடுவதற்கான நோக்கம், எதிர்காலத்தில் இதை அடித்தளமாக மாற்றுவதோடு, சில சமூக நடவடிக்கைகளையும் செய்வதாகும்.
சம்பாதிப்பதற்காக இது உருவாக்கப்படவில்லை. எங்கள் குறிக்கோள், அதிகமான இடுகைகளை வெளியிடுவதும், மேலும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவதும் ஆகும்.
“ஜோதிடம்”, “இயற்கையைச் சேமி”, “வீட்டுத் தோட்டம்”, “அரிய புகைப்படங்கள்” ஆகியவற்றுக்கான கட்டுரைகளும் எங்களிடம் உள்ளன. மேலும் “மனித உடல் / அறிவியல் / இயற்கை போன்றவை” தொடர்பான ஒரு புதிய பகுதியை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
நாங்கள் ஜனவரி 2015 முதல் கூடுதல் வகைகளை வெளியிடுவோம். எங்கள் குழு திட்டமிடல் “மத்திய அரசுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” க்கு ஆதரவளிப்பதாகும். மேலும் “பாரம்பரிய கால்நடைகள்” மற்றும் “இயற்கை வேளாண்மை” பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்க உள்ளோம்.
நீரோடையான இலக்கியம் காண விருப்பப்பட்டால் www.neerodai.com இதைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com