நீரோடை

மெல்லிய அமைதியான நீரோடை பெண்ணே!

பொங்கி எழும் கடலாக உன்னை மாற்றியது யார்?

“ஓ” சங்கமம் என்ற சந்தோசம்

நீ தனியாக இருந்த வரை, மென்மைக்கு எடுத்துக் காட்டு

கடலுடன் சங்கமித்த உடன் உன் சாந்த குணம் மறைந்து

புயலான பெண்ணாக மாறிவிட்டாய்! பார்த்தாயா?

சங்கமம் என்ற ஒன்றால் சந்தோசப்படாதே!

பின் பெரிய பூகம்பம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொள்.

– சுருதி

கட்சிக்காரன்

தலைவன் கூட்டிய கூட்டத்தில் இவன் முன்னாடி

இவன் வீட்டு கூட்டத்தில் இவன் பின்னாடி

– சுருதி

செயற்கை கருமாற்று

அன்று கண்ணன் செய்தான்

இன்று மனிதன் செய்கிறான்

இதற்கு பெயர் கண்டுபிடிப்பாம்

இறைவனை விட ஒரு சிறந்த விஞ்ஞானி யார்?

– சுருதி

விடியல் வர

மூட்டை தூக்கி இரவில் உழைக்கும் மனிதர்கள்

இரவெல்லாம் வியர்வை சிந்தி உழைத்து

விடியலில் தூங்குகின்றார்கள்

அவர்கள் வாழ்வில் விடியல் வர

– சுருதி