ஒருநாள் மட்டும் நீர் போல் இருந்து பாருங்கள்!
உங்களைச்சேர்ந்த எல்லாம் தூய்மையாகும்
உங்கள் கால் பட்ட இடமெல்லாம் பசுமையாகி செழிக்கும்
உங்கள் அமைதியான பயணம் உலகினை உயிர்ப்பிக்கும்
உங்கள் பாதையில் வருகின்ற தடையெல்லாம் தகர்க்கப்படும்
உங்கள் மேனியில் கழிவு கலந்தால் உலகமே கலங்கும்
ஒருநாளேனும் நீர் போல் வாழ்ந்தால் அதுவே தவம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942