நீ சொன்ன வார்த்தையெல்லாம்
சேர்த்து வச்சா பாட்டாச்சு
மெல்ல மெல்ல உன் நினைவில்
என் மனசு வாடலாச்சு
ஆத்தங்கரையோர ஆலமரம் பாடுதடி
ஊஞ்சலொன்று கட்டிவச்சு நம்மையிப்ப தேடுதடி
ஆத்தாடி நீயும் நானும் ஆடிப்பாடி திரிஞ்சதை
அல்லிப்பூவும் ஓடையில மெல்லிசையா பாடுதடி
காத்தடிச்சும் சாயாத காஞ்ச ஓலை காத்தாடி
நீ குத்தி வச்ச ஒத்தை முள்ளில் கட்டுபட்டு சுத்துதடி
பூத்தமல்லி வாசனையோ அந்திப் பொழுதெல்லாம் வீசுதடி
பொல்லாங்கு சொல்லாம நம்மை வாழ்த்திப் பாடுதடி
வித்தைக்காரி உன்னைத்தேடி விடிவெள்ளி காத்திருக்க
வேகமாக நீயும்வாடி வெள்ளிநிலா பாடுதடி
ஒத்தையில நானுமிங்க எப்படித்தான் ரசித்திட
ஓடிவா நீயுமடி நாம ஆடிப்பாட வேணுமடி
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!