பைந்தமிழ் சோலை
குயில் பாடிடும் மாலை
சிந்தையில் உனை
அது சேர்த்திடும் வேளை
நீ வந்திடுவாயா?
வாட வைத்திடுவாயா?
வெம்பிடும் எனை
தொட்டு மீட்டுவாயா?
மந்தாரை மலர்
மணம் மகிழ தருதே
பொந்தினுள் குருவி
இனிய பாட்டினைத் தருதே
நீ வந்திடுவாயா?
வாட வைத்திடுவாயா?
வெம்பிடும் எனை
தொட்டு மீட்டிடுவாயா?
செந்தூர வானம் முகம்
சிவந்து கிடக்க
சுந்தர நடனம் மயில்
ஆடிக் களிக்க…
நீ வந்திடுவாயா
வாட வைத்திடுவாயா?
வெம்பிடும் எனை
தொட்டு மீட்டிடுவாயா?
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!