10 மற்றும் 12 ம் அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து சற்றே
ரிலாக்ஸ் ஆன மாணவ மாணவிகளே!
உயர்கல்வி படிக்க, கோடை பயிற்சி வகுப்பு என சிறப்பு வகுப்பு
செல்லும் குழந்தைகளே!
விடுமுறை விட்டாச்சு, இனி எப்படி சமாளிப்பது என தவிக்கும் பெற்றோர்களே!
உங்கள் பொழுது போக்கிற்கு ஒரு நல்ல தீர்வு.
அருகில் உள்ள ஊர்புற நூலகம், கிளை நூலகம் மற்றும் மைய நூலகங்களுக்கு வந்து நூல்களை வாசிக்க பழகுங்கள்.
இங்கு குழந்தைகள் பிரிவு, பெண்கள் பிரிவு, போட்டித் தேர்வுகளுக்கு
தயாராகும் தேர்வர்கள் படிக்க தனி பிரிவு உள்ளது.
வீட்டுக்கு எடுத்து வந்து புத்தகங்கள் படித்து விட்டு திரும்பி தரலாம்.
இங்குள்ள இணைய தளம் பயன்படுத்த குறைந்த கட்டணமே.
மைய, முழு நேர நூலகங்கள் காலை 8 மணி துவங்கி
இரவு 8 மணி வரை செயல்படும்.
கிளை நூலகங்கள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் ஊர்புற நூலகங்கள் காலை 9 மணி முதல் 12.00 மணி வரை மாலை4 மணி முதல்6.30 மணி வரையிலும் செயல்படும்
பிரதி வாரம் வெள்ளி, 2 வது சனி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்
நூலக விடுமுறையாகும்.
இதுவரை நூலகம் பக்கம் எட்டிக்கூட பார்க்க நேரமில்லாத குழந்தைகளுக்கு இந்த கோடை விடுமுறையை பயன்படுத்தி நூலகம் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிடுவது நல்லது.
நூலகம் நாடி வாருங்கள்!
நாளைய வாழ்வில் ஒளிருங்கள்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!