நெஞ்சில் முள் – 3

எங்கும் எதிலும் கூட்டம்

கல்வி வேலை பேருந்து இரயில் பயணமென

எதற்கும் கூட்டம்

 

விதிகளை மதித்திட்டால் மோசம்

மிதித்திட்டால் உயர்வென்னும் அவலம்

எங்கும் நிறைந்திட்ட இலஞ்சம்

 

சலுகை மறவா மக்கள்

மக்களை நினையா தலைவர்கள்

மதஇன மொழிப் பிரச்சினைகள்

 

வீணாக அறிவோடு திறனாக இளைஞர்கள்

மொத்தத்தில் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது

எனும்விதமாய் இந்தியா இருப்பதனால்

 

தப்பித்து அமெரிக்கா வந்துவிட்டேன்

தங்கிவிட்டேன் இங்கே நிரந்தரமாய் வசதியுடன்

ஆனாலும் நெஞ்சில் ஒருமுள்

 

பிரச்சினையைத் தீர்க்க முயலாமல்

தான்மட்டும் விலகிக் கொள்ளும்

என்னைப் போலும் இருக்கக் கூடாது என்பதாக

– வ.முனீஸ்வரன்