பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்
படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்
கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்
இல்லாத போதும் இருந்தனர் நிறைய
இப்போது அலுவலகத்திலும் இருக்கின்றனர் பலர்
ஆனாலும் பழக்கம் என்று நூற்றுக்கு மேலும்
பண்பட்ட நண்பரென பத்துக்கு மேலும்
ஆண்களின் பெயரை அடுக்க முடிந்த எனக்கு
நண்பர்களாய் பெண்கள் எத்தனை பேர்
எதிரே பார்த்தால் ஹாய் சொல்லி
போகும் வண்ணம் சிலர் இருந்தாலும்
நட்பென்று சொல்லிக் கொள்ள
தோழமையைப் பகிர்ந்து கொள்ள
யாருமில்லை எனக்கு
நெஞ்சில் ஒரு முள்தான் இதுவும்
– வ.முனீஸ்வரன்