ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்
என் நினைவில் தவறுகளே தோன்றும்
படிக்காத மாக்கள் பாதியுண்டு
படித்தும் வீணான மீதியுண்டு
அரசு தொட்ட அத்துணை துறைகளிலும் அவலம்
தனிமனிதனிடம் கூட இல்லை இன்று நாணயம்
இருந்தும் மிதிபட்டு விதிகள் கிடக்கும் தேசம்
ஊழல் கொலை கொள்ளை இங்கு மிகஅதிகமென
மனம் குற்றப் பட்டியல் போடும்
மாற வேண்டும் மாற வேண்டும்
இந்த நாடும் இதன் மக்களும்
பேயாட்டம் போடும் எல்லாம் சரிதான்
ஆனால் மற்றோர்க்குத் தெரியாது மறைத்திட்ட போதும்
சிறிதும் பெரிதுமாய் என் செய்கைகளின்
குற்றப் பட்டியலின் நீளமும் சற்று அதிகம்தான்
என்ன செய்தேன் நான் அதைக் குறைக்க?
என்று நெஞ்சில் ஒரு முள் என்றும்
– வ.முனீஸ்வரன்
Visited 1 times, 1 visit(s) today