கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்
கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்
எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்
இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய்
இளமையோடே இன்றும் இருக்கின்றாய்
மூன்றாகப் பிரிந்தாலும் நீ என்றும்
மனதை அள்ளும் முத்தான நூல்கள் பல தந்தாய்
இந்தியாவில் முதலாக அச்சில் புகுந்தாய்
இணையத்திலும் அப்படியே – மிகநன்று
ஆனாலும் அன்னை தமிழே
பல்லாயிரம் ஆண்டாகத்
திறம்பட உனைக் காத்து எம்மிடம்
தந்துவிட்டார் எம்மூத்தோர்
இருபத்தோராம் நூற்றாண்டில் நான்
என்ன செய்யப் போகிறேன் உனக்கு
என்று நெஞ்சில் ஒரு முள்
– வ.முனீஸ்வரன்