இன்று தீபாவளி தினம்
எண்ணெய்க் குளியல் இதம்
புத்தாடை உடலை வருடும்
புன்னகை உதட்டில் மலரும்
வீட்டில் செய்தது கடை வாங்கியது
தித்திக்கும் பலவகை இனிப்பு
மதியம் சுடச்சுட கறிச்சோறு
சொந்தம் கூடி உண்பது சிறப்பு
சிவகாசியின் கைவண்ணம்
தெருவெங்கும் வெடிமுழக்கம்
விதவிதமாய் மத்தாப்பு சக்கரம்
வாணவெடிகள் காட்டும் வர்ணஜாலம்
சிறப்பாய் நகரும் தீபாவளி
செலுத்தியது நெஞ்சில் ஒருமுள்
கொண்டாட்டத்தில் கொஞ்சம் மது
குடித்தால் இன்பம் மிகுமென்று
சிறுவர் இளைஞர் ஒன்று சேர்ந்து
முதன்முதலாய் சாராயம் குடிக்கும்போது
– வ.முனீஸ்வரன்