நெஞ்சில் முள் – 1

இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்

பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்

புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!

 

உனக்கொரு வேலை வேண்டும்! உன் துறையில்

உன் பங்களிப்பு உலகெலாம் செல்ல வேண்டும்!

பார்மெச்சப் பவனி நீ வர வேண்டும்! அதற்கு

ஆங்கிலம் வேண்டும்; கட்டாயம் வேண்டும்!

 

மறுப்பதற்கில்லை…

ஆனாலும் நெஞ்சில் ஒருமுள்.

 

அகிலம் சுற்ற மட்டுமல்ல

அம்மா அப்பா என அழைத்தல் விட்டு

மம்மி டாடி என அன்பு காட்டவும்

உனக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால்.

வ.முனீஸ்வரன்