நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 2 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தின் பகுதி அது. காவிரியின் கிளை ஆறுகளான திருமலைராயன், குடமுருட்டி மற்றும் முடிகொண்டான் ஆகிய மூன்று ஆறுகள் அழகு நடைபோட்டு செல்லும் பகுதியென்பதால் ஆங்காங்கே வற்றாத குளங்களும் கண்மாய்களுமாய் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தன. கண்களுக்கு எட்டியவரை பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் ‘பச்சைப் பசே’லென்று காற்றிலாடும் நெற்கதிர்களைக் கொண்ட கழனிகள், வாழைத் தோப்புகள், மாஞ்சோலைகள் மற்றும் கரும்புத் தோட்டங்கள். இயற்கையன்னை சுவீகரித்துக் கொண்ட இடமோ என எண்ணும்படி பசுமை மிகுந்த … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 2 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.