ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டும் போக்கும்
ஆறுகள் அழகிழந்து
அழுக்காகி கிடக்கிறது
அருவி நீரோ ஆண்டுக்கு
சில மாதம் என்று
தேய்ந்து தான் கிடைக்கிறது
குக்கர் வந்த காரணத்தால் சோற்று நீரும்
கானல் நீராய் கரைந்து தான் போயிற்று
வாதமும் பித்தமும் வல்லூறாய் பறக்கிறது
பழக்கங்கள் மாறியதால் பாவம்
நம் உடலிங்கு பழுதாகி தவிக்கிறது
இது பற்றி சிந்திக்க நேரம் வர மறுக்கிறது
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942