இதயத்தில் இருப்பவனே
இணையவரானால்…
சொல்லும் செயலும்
இணைந்தே இருக்குமானால்…
தாயோ மகளோ மருமகளோ
நம் போன்றே பெண்ணென்று
உணர்வோமானால்…
இதயமும் மூளையும்
இணைந்தே செயலாற்றுமானால்…
நாடோ வீடோ நயவஞ்சகம்
இல்லாதிருக்குமானால்…
ஆற்றும் வினையில்
ஆக்கமே பலனானால்…
தவறை உணர்ந்து விளைவை
எதிர்கொள்ள தயாரானால்…
தப்பிக்க நினைத்திடா தரமான
துணிவு இருக்குமானால்…
மொத்தத்தில்
மானிடராய் பிறந்த ஒவ்வொருவரும்
பிறருக்காய் நல்லவர் வேடமிடாது
தனக்காய் நல்லவராய் வாழ முடியும் என்றால்
அன்றுதான் காண்போம் எங்கெங்கும்
நேர் கொண்ட பார்வை
மறுமொழி இடவும்