நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறார்கள்.

இந்துக்கள் வருடத்தில் பலமுறை விரதம் மேற்கொள்வார்கள்.

எல்லா மதங்களிலும் நோன்பு இருப்பது கடமை. ஆனால் அதன் வழிகளும் வழிமுறைகளும் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் என்பது அவரவர் இறைவனுக்காக மட்டுமே! என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஏன் நோன்பு நோற்கிறோம்?

நாம் தவறு செய்வதற்கான மிக முக்கிய காரணம் நமது கீழான மனது தான். நமது மனம் எதை சொல்கிறதோ அதை அப்படியே செய்கிறோம்; மறுப்பதை மறுக்கிறோம்.

நமக்குத் தெரிந்தவர் தவறு செய்தால் அவர் மீதான நமது பார்வையும், நமக்கு பிடிக்காதவர் தவறு செய்தால் அவர் மீதான நமது நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பதன் மூலம் நமது மன அலைகளை புரிந்து கொள்ள முடியும்.

இதுபோன்று எல்லா விஷயங்களிலும் நமது மனது சொல்வதை தான் கேட்கிறோமே தவிர, உண்மை நிலை என்ன என்பதை அறிபவர்கள் குறைவு.

நமது கீழான எண்ணங்கள் நமது ஆசைகளை, இச்சைகளை அதிகரிக்கிறது. அந்த இச்சை நம்மை பாவத்தின் பக்கம் தள்ளுகிறது. அந்தப் பாவம் நம்மை படைத்த இறைவனை அறிய தடையாக மாறுகிறது.

மனமது செம்மையானால்…

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட.

நாம் வசிக்கும் இடங்களில் சிங்கமோ புலியோ வந்து விட்டால் பயந்து ஓடி ஒழிகின்ற நாம், அதே நேரத்தில் சர்க்கஸ்காரர்கள் சிங்கத்தையும் புலியையும் தங்களுக்கு அருகில் வைத்ததற்கான காரணம் என்ன என்று யோசித்தால், பசி தான் அங்கும் காரணமாக இருக்கும்.

மனதை செம்மைப்படுத்துவதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் பசி அவசியம் என்பதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.

ஆகிய மூன்றும் நோன்பின் அடிப்படை. இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தை ஒன்று சேர்த்தால் பதவி என்று வரும்.

பாதை மாறும் பயணம்

ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது நம்மை பார்த்து, தம்பி! நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டால், நான் இந்த இடத்திற்கு செல்கிறேன் என்று பதில் வரும்;

பதில் சொல்ல வேண்டியதில்லை என்றால் அமைதியாக கடந்து விடுவோம்.

ஆனால் பயணிக்கும் நமக்கு எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற புரிதல் இருக்கும் அல்லவா?

அதுபோல் நம்மிடம் நீங்கள் யார்?

எதற்காக இருக்கிறீர்கள்?

உங்கள் வாழ்க்கை பயணத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டு பாருங்கள்.

நம்மில் பலருக்கும் பதில் தெரியாது. அதற்கான பதில் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் எனக்கு பிடித்தமான பாடல் ஒன்று.

எத்தனை காலம் நோன்பு நோற்கிறோம்; விரதம் இருக்கிறோம்.

ஆனால் அதன் பலனாக நமது மனதை கட்டுப்படுத்தி, அந்த இறைவனை கண்டோர் நம்மில் எத்தனை பேர்?

அதில் நாமும் ஒருவரா?

அவரவர் பதில் சொல்லட்டும்.

பாதை மாறும் பயணங்களில் வாழ்க்கையின் நோக்கத்தை வலியுறுத்துவதற்காக செய்யப்படும் நோன்புகளின் விரதங்களின் மூலம் இனியாவது நாம் பாடம் பெறுவோமா?

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர்
பொருளாதாரத் துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.