ந‌ற்சிந்தனையை பரப்பிடவே வேண்டும்!

சினம்கொண்ட கொரோனா நோயதனை துரத்திட நாளும் – நற்
சிந்தனையை பரப்பிடவே வேண்டும்! வேண்டும்!!

கனவும் கூட இனிமையாக வருவதில்லையே‍ – ‍‍நேரில்
காணும் காட்சி மகிழ்ச்சி யினை தரவுமில்லையே
நினைவுகளோ நோய் தொற்றின் உடும்பு பிடியிலே – நாம்
நிம்மதியாய் வாழும் வழி தெரியவில்லையே

உணவும் நீரும் உடலைக் காக்கும் நிலையும் மாறுது – உலகை
ஊசி மருந்து மாத்திரைகள் காவல் காக்குது
பணம் பதவி பகட்டு எல்லாம் பதுங்கி கிடக்குது – இன்று
பரவி வரும் நோய்த்தொற்றில் அடங்கி கிடக்குது

தினமும் பயம் சூழ்ந்திடவே பொழுதும் விடியுது – உலகம்
திக்கு எட்டும் தனித்தனியாய் சிதறி ஒதுங்குது…
சினம்கொண்ட கொரோனா நோயதனை துரத்திட நாளும் – நற்
சிந்தனையை பரப்பிடவே வேண்டும்! வேண்டும்!!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.