பகட்டான சிறை – ஹைக்கூ கவிதை

மழை பொழிகிறது

மகிழ்ச்சி இல்லை

ஒழுகின்ற ஓடு

 

மகிழ்ச்சி தரவில்லை

மகிழுந்து பயணம்

முதல்நிலை ஓட்டுநர்

 

தொடரும் நண்பன்

தொட நினைத்தும் முடியவில்லை

நிழல்

 

பணம் கொடுத்து அனுப்பப்படும்

பகட்டான சிறை

மழலையர் பள்ளி

 

அடிமை என்றே தெரியாமல்

முதலாளிக்கு ஊழியம் புரியும்

பன்னாட்டு நிறுவன ஊழியர்

 

கரம் பிடித்த பின்

கனவு கலைந்தது

ஆவணக் கொலை

தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்

 

8 Replies to “பகட்டான சிறை – ஹைக்கூ கவிதை”

  1. அருமை மா.நல்லதொரு ஆரம்பம்.தொடரட்டும் உங்களின் இலக்கிய பயணம்.வாழ்த்துகள் 💐💐💐👌👌👏👏👍👍🤝😍

    ரா.சண்முகலட்சுமி
    அம்பத்தூர்,சென்னை
    9840263431

  2. உள்ளத்தில் உள்ளதெல்லாம் வெள்ளமாய்க் கொட்டுது மகளே…. தொடரட்டும் கலைநயத்துடன் கூடிய உன் சமூகப் பார்வை….

  3. அக்கு ஹீலர்.சொ.வே.தனலெட்சுமி-திருச்சி.

    அருமை தோழர்,
    குறிப்பாக,
    மழலையர் பள்ளி – மிகச் சிறப்பு !!
    நம் குழந்தைகளை அச்சிறையிலிருந்து விடுவித்துவிட்டாலே மற்றவை அனைத்தும் நலமாகும்.

  4. அக்கு ஹீலர் கிருஷ்ணவேணி கம்பம்

    மழை பொழிகிறது மகிழ்ச்சி இல்லை ஒழுகின்ற‌ஓடு. கவிதை
    யில் வறுமை வாழ்க்கையை பிரதிபலித்துள்ளீர்கள். நல்ல நல்ல
    கவிதைகள் வாழ்த்துக்கள் பா சுமையா . மேலும் சிறக்க
    வாழ்த்துக்கள் பா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.