பகவதியே பகலொளியே பகர்வேன் நாமம்
அகவிருளை அகற்றுவளை அடைவேன் நானும்
பகர்வதனால் என் சன்மம் உயரும் நாளும்
பகட்டில்லை நின் பெருமை உரைப்பேன் நானும்
அன்னையின் அன்பிற்கு நிகரில்லை – யானும்
உகவையால் பெரும் பேறு பெறுவேன் நாளும்
உடுக்கையிலே ஒலிவடிவாய் உறையும் தாயே
அடைக்கலமே என் தனக்கு தருவாய் நீயே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com