குங்குமத்தால் அர்ச்சனை செய்வோம் பகவதி தாயே
தங்கிடுவாய் எம் மனதில் முழுவதும் நீயே
குறை நீக்கி வாழ்வருள்வாய் குங்குமக்காரி
கருணை கொண்டு காத்தருள்வாய் எம் குலதேவி
மலர் இதழால் உன் பல்லாயிரம் பெயர் சொல்வோம்
பல பலவாய் குவியும் எங்கள் பாவங்கள் செல்லும்
உன் திருநாமம் ஒலித்திடுமே ஜகத் காரணீ
ஒளி நிறையும் இனிதமையும் துணை ஸ்ரீ ராஜேஸ்வரி
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com