பசுமை தேடுதல் – கவிதை

வேர்

ஈரமற்று நிலம் தகிக்க

குத்தாய் நின்ற பாறையை

நகர்த்திய வெக்கையில் அலைகிறது

கானல்

நிலை நழுவி

பிடிப்பற்று உருண்டு

நசுங்கி

நொறுங்கி தூளாகியது பாறை

மணலாய்

கால் வைக்க முடியாமல்

கனன்ற

கானலின் தாக்கத்தில்

கருகிப் போவது

கால்கள் மட்டுமல்ல

நீரும்

தாவரங்களும் கூடத்தான்

மரத்தை மாய்த்து

மழையைத் தீய்த்துவிட்ட

மனிதன்

வேள்வியின் நெருப்பில் தேடுகிறான்

கழுதை கல்யாணங்களிலும்

பசுமையை

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.