பச்சிளங் குழந்தைகளால் பேச முடியாததால் அவற்றின் நோயை நாம் அவை காட்டும் அறிகுறிகள் கொண்டே அறிய வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருக்கும். அது என்ன என்று பார்ப்போம்.
உடம்பில் வலி இருக்கும் போது குழந்தை விடாமல் கடுமையாக அழும்.
உடலில் எங்கு வலியோ நோயோ தோன்றியிருக்கிறதோ அவ்விடத்தை குழந்தை அடிக்கடி தொட்டபடி இருக்கும். பிறரை அந்த இடத்தை தொடவிடாது.
குழந்தைகள் தலைவலியால் அல்லது தலையில் நோயால் பாதிக்கப்பட்டால் கண்கள் மூடியபடியே இருக்கும்.
வயிற்று வலியால் அல்லது வயிற்று நோயால் பாதிக்கப்படும் போது மலச்சிக்கல், வாந்தி, வயிற்று பொருமல், வயிறு உப்புதல், பால் குடிக்காமல் இருத்தல் வயிற்றை உள்ளும் வெளியுமாக நெளித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
வலி அல்லது நோய் சிறுநீர்ப்பையிலும், ஆசன வாயிலும் தோன்றும் பொழுது மலம், மூத்திரம தடைப்படுதல், பயம், கண்பார்வை தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
வியாதிகளை மேலும் அறிய குழந்தைகளின் உடம்பு, துவாரங்கள், வவ்வேறு இடங்கள், மூட்டுகள் யாவையையும் ஆராய வேண்டும்.
குழந்தை நாக்கு, உதடு இவைகளைக் கடித்தல், மூச்ச முட்டுதல், கைவிரல்களை சுருட்டி மூடுதல் இந்த அறிகுறிகள் இருதய வியாதியைக் குறிக்கும்.