பச்சைப்பயறு வெல்ல சுண்டல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு : 3 கப்

வரமிளகாய் : 2

தேங்காய்பூ : 1 மூடி

கடுகு : 1 டீஸ்பூன்

உப்பு : 1 ½ டீஸ்பூன்

எண்ணெய் : 1 ½ டேபிள் ஸ்பூன்

வெல்லம் : 150 கிராம்

 

செய்முறை

பச்சைப்பயறை வெறும் வாணலியில் சற்று வறுத்து வேக வைத்து உப்பு போட்டு வடி கட்டவும்.

பின்பு வேறொரு பாத்திரத்தில் கடுகு, வரமிளகாய் தாளித்து, பச்சைப்பயறைக் கொட்டி, வெல்லம் சேர்க்கவும்.

சுண்டல் நன்கு சேர்ந்து வந்ததும் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். சுவையான பச்சைப்பயறு வெல்ல சுண்டல் ரெடி.

இந்த சுண்டலுக்கு பச்சைப் பயிறை ஊற வைக்க வேண்டாம்.