கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது.
படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி தை மாதம் 1 ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
மறுநாள் முருக பக்தர்கள் குழு ஆறாம் ஆண்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு பால்குடம் எடுத்தல் அதன் பின் அம்மன் அழைப்பு நடைபெற்றது.
தைப்பூச நாளான திங்கட்கிழமை மூலவர் பழநி ஆண்டவர் அபிசேக பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 8 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேதராக திருத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க திருக்கோயிலை திருத்தேரில் வலம் வந்தார்.
இவ்விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ்,கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் எஸ்.ஞானசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் படியனூர்,சின்னப்படியனூர்,வடவள்
மறுநாள் மதியம் காவடி விழா முடிந்து இரவு பரிவேட்டை, தெப்பம், மஞ்சநீர் வழிபாடு நடைபெற்றது. அடுத்த நாள் மறுபூஜையையொட்டி அபிசேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.