படைப்புகளை அனுப்ப
வாட்சப் : 9943906900
மின்னஞ்சல் : admin@inidhu.com
எழுதத் தயங்காதீர்கள்!
உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.
நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது.
மனிதகுலத்துக்குத் தேவையான எதைப்பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்.
உங்களின் ஒரு சிறு படைப்பு, யாரோ ஒருவரின் மனதில் விதையாய் விழுந்து, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
எழுத்துப் பிழை வரலாம் எனப் பயப்படாதீர்கள். நாங்கள் அதை சரிசெய்து கொள்கிறோம்.
மிக நீண்ட பயணத்தின் முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்கள் திறமையின் எல்லை விரிந்து கொண்டே செல்லட்டும்.
எதை எழுதுவது?
எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.
சுயமுன்னேற்றம் பற்றி எழுதுங்கள்.
இந்தப் பூமியைக் காக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் பற்றி எழுதுங்கள்.
இலக்கியம் பற்றி எழுதுங்கள் அல்லது புதிய இலக்கியம் படையுங்கள்.
இருபத்திரண்டாம் நூற்றாண்டிலும் தமிழ் தரணியில் நிலைக்க வேண்டுமானால், அதைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகச் சிறுவர் இலக்கியம் படையுங்கள்.
எல்லாம் அவன் செயல் என்று ஆன்மிகம் பற்றி எழுதுங்கள்.
நூல் மதிப்புரை எழுதுங்கள்.
இவை தாண்டி எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள். அது மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்தாக இருக்க வேண்டும்; அவ்வளவுதான்.
எப்படி எழுதுவது?
உங்கள் கருத்தை, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ, அந்த வடிவிலேயே எழுதுங்கள்.
கட்டுரையாக எழுதலாம்.
கவிதையாக எழுதலாம்.
கதையாக எழுதலாம்.
ஓவியமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
நல்ல புகைப்படத்தை, காணொளியை உருவாக்கலாம்.
தங்களுக்கு கணினியில் நல்ல பரிச்சயம் உண்டு என்றால், தயவுசெய்து தட்டச்சு செய்து அனுப்பவும்.
உங்கள் படைப்புகள் பாமினி அல்லது யுனிகோடில் இருந்தால் நல்லது.
ஏற்கெனவே வேறு இதழில் தங்கள் படைப்பு பிரசுரம் ஆகி இருந்தால், தயவு செய்து அதனை அனுப்ப வேண்டாம்.
தாள்களில் எழுதி அனுப்புவதாக இருந்தால் தயவுசெய்து முதலில் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களின் சந்தேகங்களுக்குத் தயங்காமல் என்னுடைய அலைபேசி எண் 9943906900 மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
மகிழ்வுடன் உங்களது படைப்புகளை வரவேற்கிறோம்.
சிறகை விரிப்போம்; வானம் நமதே!
அன்புடன்
வ.முனீஸ்வரன்
ஆசிரியர்
மின்னஞ்சல் : admin@inidhu.com
வாட்சப் : 9943906900
தபாலில் அனுப்ப:
இனிது இணைய இதழ்
ரோவன் சாப்ட்வேர் சொலுசன்ஸ்
4 / 1332 சாமிபுரம் காலனி
சிவகாசி – 626189
இனிது இணைய இதழுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
எதைப்பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் எனும் பொழுதே மனம்
வானில் சிறகை விரிக்கிறது!
ஒரு படைப்பாளியின் ஆரம்ப கட்ட எழுத்துக்களை வரவேற்றுப் பதிவிடுவது, ஒரு பெரிய மரத்தின் கனவுகளை சின்ன விதைகளாக ஊன்றி ,நீர் ஊற்றி பாதுகாத்து அழகு பார்ப்பதற்கு சமம் .
என்னுடைய முதல் சிறுகதை “தனிமரம்“வெளியானபோது எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சி.
ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் விருது வாசகர் வார்த்தைகளே.
எனக்கு கிடைத்த ஒரு சில வாழ்த்துக்கள், நான் விருது பெற்றதைப் போல என்னை உணர வைத்தன.
இனிது இணைய இதழைப் பற்றி, திறந்த மனதோடு தென்றல் காற்றை அனுப்பி, இன்னும் சொல்ல முடியாத வாழ்த்துக்களை என் மனம் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும்.
இனிது ஆசிரியர் அவர்கள் இன்னும் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட வாழ்த்துங்கள்.
ஓர் இதழை நடத்தி வாராவாரம் பதிப்பிப்பது என்பது சாதாரணம் அல்ல. அதற்கு பரந்துபட்ட மனப்பான்மை வேண்டும்.
அது உங்களிடம் இருக்கிறது.
வண்ண வண்ண வாசம் வீசும் பூக்களை, நீங்கள் போகும் இடமெல்லாம் தென்றல் காற்றோடு அனுப்பி வைத்து வாழ்த்துகிறேன்.
தமிழகமெங்கும் இனிது தமிழோடு தவழட்டும்.
இனிது இணைய இதழ் இந்தியாவெங்கும் பரவட்டும்
மனித மனங்களில் தென்றலாய்.
வாசகனுக்கு மட்டும் தெரியும் புத்தகங்கள் காதலியென்று.
வாசகிக்கு மட்டும் தெரியும் புத்தகங்கள் காதலனென்று.
இதயத்திற்கு நெருக்கமாய் இருக்கும்
இனிதுவின் பயணம் இனிமையாகத் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்…………………!!!