பிரான்ஸில் இருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு ஆகும். படைப்புலகின் நடுநாயகமான நடு இணையற்ற படைப்புகளை வெளியிட்டு வருகிறது.
“கலையில் உண்மையுண்டு; உண்மையெல்லாம் கலை அல்ல”எனும் தாரக மந்திரத்துடன் மிக அருமையான இணைய இதழாக இவ்விதழ் வெளிவருகிறது.
இதழ் 01, ஆனி 2016 தொடக்கம் இன்று வரை (இதழ் 39 மாசி 2021) இந்த இணைய இதழ் தொடர்ந்து வருகின்றது.
இவ்விதழின் பக்கங்களாகக் கீழுள்ளவைகள் உள்ளன.
• ஆசிரியர் குறிப்பு
• சிறுகதை
• சிறுகதை மொழிபெயர்ப்பு
• சிறப்பு எழுத்துகள்
• கவிதை
• கவிதை மொழிபெயர்ப்பு
• நேர்காணல்
• நேர்காணல் மொழிபெயர்ப்பு
• நூல்விமர்சனம்
• விமர்சனம்
• சினிமா விமர்சனம்
• நூல் முன்னோட்டம்
• பத்தி
• கட்டுரை
• சிறுவர் இலக்கியம்
• ஈழத்து ஆளுமைகள்
• கடித இலக்கியம்
• கலைக்கூடம்
• புகைப்படம்
• ஓவியம்
• அட்டைப்படங்கள்
• உள்ளடக்கங்கள்
• இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்
• இவர்களைக் கொண்டாடுவோம்
• கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்
• வாசிகசாலை
• நிலங்களின் எழுத்துகள்
• புற எழுத்துகள்
இவர்களைக் கொண்டாடுவோம் பகுதியில் 27 எழுத்தாளர்கள் குறித்து விரிந்த கட்டுரைகள் ஆக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கம் பகுதியில் 18 இதழ்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் பட்டியல் உள்ளடக்கமாகப் போடப்பட்டுள்ளது .
கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் பகுதியில், 32 படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை காணொலிகளாகப் பதிவிடப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு, பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 27-ல்: கனடாவில் இருந்து நாடக அரங்காற்றுக் கலைஞரான அரசி விக்னேஸ்வரன் அவர்கள், கவிஞர் சேரனின் கவிதைகள் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
இவர் கவிதாயினி அவ்வை அவர்களின் மகள் என்பது மேலதிகத் தகவல். அரசி விக்னேஸ்வரனுக்கு எமது வாழ்த்துகள் என பதிவரை அறிமுகப்படுத்தி அதன் பின் காணொலியைப் போட்டுள்ளனர்.
அட்டைப்படங்கள் பகுதியில் 40 படங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் இவர்களைக் கொண்டாடுவோம் பகுதியில் சிறப்பிக்கப்படும் எழுத்தாளர்களைப் பற்றியே அதிகம் வரையோவியமாக உள்ளன. மற்றவை நவீன ஓவியமாக உள்ளன. அதிபுனைவை இவ்வோவியங்கள் விளக்குகின்றன.
ஆறு சிறப்பிதழ்கள் இதுவரை அவ்வப்பொழுதுகளில் வெளியிடப் பெற்றிருக்கின்றன. அவையாவன:
1. இதழ் 03 – சினிமா சிறப்பிதழ் : ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 – 41 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
2.இதழ் 05 – கிழக்கிலங்கை சிறப்பிதழ்: சித்திரை வைகாசி ஆனி ஆடி 2017- 24 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
3.இதழ் 07 – மலையகசிறப்பிதழ்: ஐப்பசி கார்த்திகை மார்கழி 2017- 32 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
4.இதழ்: 12 – சிறுகதை சிறப்பிதழ்: கார்த்திகை 2018 – 9 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
5.இதழ்: 16 – கவிதைச் சிறப்பிதழ்: பங்குனி 2019 – 25 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
6.இதழ்: 21 – தமிழகச் சிறப்பிதழ்: ஆவணி 2019 – 26 படைப்புகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
மொத்ததில் தமிழின் மிகச் சிறந்த இணைய இதழ்களில் இதுவும் ஒன்று. உலகத் தமிழ்ப் படைப்பாளர்களை இவ்விதழ் மூலம் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது.
இவ்விதழைப் படிக்க… https://naduweb.com எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!