பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?
ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?
புசிப்பதென முடிவு செய்த பின்னர்
புலிக்கறியோ புளிக்கறியோ?
நக்கும் நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன….
பருவ வனப்பில் பன்றியும் அழகாமே
பார்வை குரூரத்தில் பார்க்கும் பிஞ்சும் சருகாமே
நையப்புடை நையப்புடை
நையும் வரை நெஞ்சைப் புடை
நயந்து பயந்து நயவஞ்சக செயலைக் கண்டு
நெட்டை மரமென நின்று புலம்பி
நாய் போல் குரைக்காமல்
சீறிச் சினந்து குதறிக் கிழித்திடு
சிங்கம் போல்
கூக்குரல் மாற்றிடு
