பணத்தை சாப்பிட முடியாது

ஒரு நாட்டில் பெரும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார்.

அரசாங்கம் அவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தார்.

ஒருநாள் தனது பொக்கிஷங்கள் (கஜானா ) நிறைந்த அறைக்குள் கணக்கு பார்க்க‌ நுழைந்தார். தவறுதலாக சாவியைக் கதவின் முன்பக்கத்திலேயே வைத்து விட்டார்.

உள்ளே அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடிவிட்டன‌.

அவர் உள்ளே இருந்து கதவைத் திறக்க முயற்சி செய்தார். அவரால் கதவைத் திறக்க முடியவில்லை.

பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் இப்படி எழுதினார்.

நான் உலகில் மிகவும் பணக்காரனாக‌ வாழ்ந்தேன். ஆனால் எனது சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்

அவர் மரணித்து பல வாரங்களுக்கு பின்னரே அவரின் உறவினர்களுக்கு தெரிய வந்தது.

பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்தக் கதை ஒரு பாடமாக அமையும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.