சணல் என்பது மிருதுவான, நீளமான பளபளக்கும் தாவர இழையாகும். இந்த தாவர இழையே கயிறு மற்றும் திடமான நூலாக மாற்றப்படுகிறது. சணற்பைகள், தரை விரிப்புகள் மற்றும் பல பொருட்கள் தயாரிக்க சணல் பயன்படுகிறது.
சணல் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை :-
30C உள்ள அதிக வெப்பமும், 150 செ.மீ. மேலான மழையளவும் சணல் வளர தேவைப்படுகிறது. வண்டல் மண் சணல் விளைவிக்க ஏற்ற மண் வகையாகும்.
சணல் செடிகளை நீரில் ஊற வைத்து மக்கச் செய்து இழைகளை பிரித்தெடுக்கும் செய்கைக்குத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஊறவைத்து மக்கச் செய்தல் என்பது ஒரு நுண் உயிரியல் செய்முறையாகும். இம்முறையில் சணல் தாவரத்தின் மேற்பகுதியை மிருதுவாக்க 2 – 3 வாரங்கள் நீரில் ஊறவைத்து மக்க செய்த பின்னர் இழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்தியாவும், வங்காள தேசமும் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகளாகும்.