பணம் – பல பெயர்கள்

‘பணம் பத்தும் செய்யும், ‘பணம் பாதாளம் வரை பாயும்’, ‘பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’ இவையெல்லாம் பணத்தைப் பற்றிய பழமொழிகள்.

மக்களின் முக்கியத் தேவையாக பணம் உள்ளது. பணம் இல்லையெனில் வாழ்க்கை இல்லை என்பது இன்றைய சூழ்நிலை. பணமே எல்லாவற்றிக்கும் மூலாதரமாக இருக்கிறது.

மக்கள் தங்களுக்கிடையே பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதாக பரிமாறிக் கொள்ள பணம் மதிப்புடைய ஒரு அடையாள அலகாக உள்ளது.

பணம் ஆரம்ப காலத்தில் நாணயப் பரிமாற்றமாகவே இருந்தது. அதன் பின்னே தாள்களாக அச்சிடப்பட்டது.

உலகின் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்பட பணமே முக்கியக் காரணம். இவ்வாறான பணமானது அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பல்வேறு பெயர்களைப் பெறுகிறது.

செய்யும் வேலைக்குப் பெறுவது – ஊதியம்

கோவில் உண்டியலில் செலுத்தினால் – காணிக்கை

அர்ச்சகருக்குக் கொடுத்தல் – தட்சணை

கல்விக்கூடங்களில் செலுத்தினால் – கட்டணம்

திருமணத்தில் கொடுத்தால் – சீதனம்

விபத்துகளில் கொடுத்தால் – நஷ்டஈடு

இன்ஷ்யூரன்ஷ் செலுத்தினால் – காப்பீடு

வங்கிகளில் வைத்தால் – வைப்புத்தொகை

ஏழைக்கள் கேட்டுக் கொடுத்தால் – தர்மம்

திருமண வீடுகளில் கொடுத்தால் – மொய்

நீதிமன்றங்களில் செலுத்தினால் – அபராதம்

அரசிற்கு செலுத்தினால் – வரி

பணி ஓய்வு பெற்ற பிறகு கிடைப்பது – ஓய்வு ஊதியம்

திருப்பித் தரவேண்டும் எனக் கொடுத்தால் அது – கடன்

திருமண முறிவில் கொடுப்பது – ஜீவனாம்சம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.