பத்து பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பைய பைய ஊதினேன்
பைய பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
காண ஓடி வாருங்கள்
விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்.
-அழ.வள்ளியப்பா